தமிழ்
Surah At-Tariq ( The Night-Comer ) - Aya count 17
وَالسَّمَاءِ وَالطَّارِقِ
( 1 ) வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ
( 2 ) தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
النَّجْمُ الثَّاقِبُ
( 3 ) அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ
( 4 ) ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ
( 5 ) மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ
( 6 ) குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
( 7 ) முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ
( 8 ) இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
يَوْمَ تُبْلَى السَّرَائِرُ
( 9 ) இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
فَمَا لَهُ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ
( 10 ) மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ
( 11 ) (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ
( 12 ) (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ
( 13 ) நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
وَمَا هُوَ بِالْهَزْلِ
( 14 ) அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا
( 15 ) நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
وَأَكِيدُ كَيْدًا
( 16 ) நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا
( 17 ) எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.